
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகள் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.59.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப.ஆகாஷ் வழங்கினார். பள்ளி மாண, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.