
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களையும், தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார்.
நாட்டின் 78 ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களையும், தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாவை ஆட்சியர் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 66 பேருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் அனைத்து துறைகள் சார்பில் 51 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர் - மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.