பிகார்: பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே!

பிகாரில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே
Published on
Updated on
1 min read

பாட்னா: பிகாரில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

பிகார் மாநிலம், தாராரி தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த சுனில் பாண்டே, முன்னாள் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாட்னாவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

"நான் 2000 ஆம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வருகிறேன், இப்போது முறையாக தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்துள்ளேன்" என்று பாண்டே கூறினார்.

2000 இல் சமதா கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பாண்டே, 2005 மற்றும் 2008 பேரவைத் தேர்தலில் தாராரி (பிரோ) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சுனில் பாண்டே
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

கடைசியாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் சார்பாக தாராரி தொகுதியில் போட்டியிட்டு பாண்டே வெற்றி பெற்றார்.

2010 இல், தாராரி தொகுதியில், ஜேடி(யு) வேட்பாளராக போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்ற பாண்டே, 2020 பேரவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தாராரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

பிகாரின் தாராரி, ராம்கர், ஜஹானாபாத் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

பிகாரின் தாராரி, ராம்கர் தொகுதியில் பாஜக போட்டியிட விருப்புவதாகவும், ஜஹானாபாத் தொகுதியில் ஜேடி(யு), இமாம்கஞ்ச் எச்ஏஎம்(எஸ்) போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com