

மறைந்த நடிகரும் துக்ளக் ஆசிரியருமான 'சோ' ராமசாமி மனைவி சௌந்தரா ராமசாமி (வயது 84) காலமானார்.
2016-ல் சோ ராமசாமி மறைந்த நிலையில், சென்னையில் தனது குடும்பத்துடன் சௌந்தரா ராமசாமி வசித்து வந்தார்.
உடல்நலக் குறைவு மற்றும் முதுமை காரணமாக நேற்றிரவு (ஆக. 19) சௌந்தரா ராமசாமி காலமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சௌந்தரா ராமசாமிக்கு மகன் ஸ்ரீராம், மகள் சிந்துஜா உள்ளனர். நாளை ஆக. 21 முற்பகலில் சௌந்தரா ராமசாமியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.