
பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக. 27) காலமானார்.
யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமான இவர், கோமாளி, நட்பே துணை, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் பிரபலமானார்.
தீவீர குடிபழக்கத்துக்கு ஆளான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிஜிலி ரமேஷ் இன்று காலமானார்.
நடிகர் பிஜிலி ரமேஷின் இறுதிசடங்குகள் இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.