நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் ஸ்ருதிஹாசனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பிரதான வேடங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முன்னதாக, கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிரின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து இருந்தது.
இந்நிலையில், கூலி படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ப்ரீத்தி பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.