கோவில்பட்டியில் மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரியில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

கோவில்பட்டியில் வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்ததில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
மின்கம்பி உரசி தீப்பிடித்து எரியும் கண்டெய்னர் லாரியில் தீயை அணைக்கு தீயணைப்பு வீரா்கள்.
மின்கம்பி உரசி தீப்பிடித்து எரியும் கண்டெய்னர் லாரியில் தீயை அணைக்கு தீயணைப்பு வீரா்கள்.
Published on
Updated on
1 min read

கோவில்பட்டியில் வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்ததில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

விருதுநகரை சேர்ந்த வெங்காய வியாபாரி ரமேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள வீட்டில் குடியேற உள்ளார். இதற்காக சனிக்கிழமை அதிகாலை விருதுநகர் வீட்டில் இருந்த உபயோக பொருட்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றி கோவில்பட்டியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். லாரியை சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த செல்வம் (66) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கண்டெய்னர் லாரி பசுவந்தனை சாலையில் வந்த போது, கண்டெய்னர் லாரி மின்கம்பியில் உரசியதில் மின்கம்பி அறுந்து கண்டெய்னர் லாரி மீது விழுந்து தீப்பிடித்து.

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரியும் கண்டெய்னர் லாரியில் தீயை அணைக்கு தீயணைப்பு வீரா்கள்.
கங்கனா ரணாவத் திரைப்படத்தை தடை செய்ய தெலங்கானா அரசு பரிசீலனை

இதில், கண்டெய்னர் லாரியின் வெளிப்பகுதி மட்டுமின்றி, உள்ள பகுதியிலும் தீப்பிடித்து எரிந்தது. லாரியின் உள்ளே இருந்த டிவி, ஏசி, கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாசிங் மிஷன், பாத்திரங்கள் என அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பைக் ஆகியவை முற்றிலுமாக எரிந்து நாசமானது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் லாரியில் இருந்த சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரித்து நாசமானது.

மின்சார வயர் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com