செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் சனிக்கிழமை போலீஸார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், போதை மாத்திரைகள், காஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.