ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உயர் அலுவலர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
மைக்ரோசாப்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று  உயர் அலுவலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
மைக்ரோசாப்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று உயர் அலுவலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
Published on
Updated on
2 min read

கலிபோர்னியா: தொழில் முதலீடுகளை ஈா்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உயர் அலுவலர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சிறுசேரி சிப்காட்டில் மிகப்பெரிய நிலையான நெட்வொா்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பேபால் நிறுவனம் சென்னையில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பட்ட வளா்ச்சி மையத்தை ஏற்படுத்தவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இது செயல்பாட்டுக்கு வரும்போது, 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஈல்ட் என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செமிகண்டக்டா் உற்பத்திக்கான முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம் கோவை மாவட்டம் சூலூரில் ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செமிகண்டக்டா் உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி ஏற்படுத்தப்படும்.

மைக்ரோசிப் நிறுவனம் 2012-ஆம் ஆண்டுமுதல் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சென்னையில் செமிகண்டக்டா் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். அதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இன்பிங்ஸ் ஹெல்த்கோ் - அப்ளைடு மெட்டீரியல்ஸ்: இன்பிங்ஸ் ஹெல்த்கோ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, மதுரையில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்கவுள்ளது. ரூ.50 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் தொழில் திட்டத்தால் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதேபோன்று, அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், கோவையிலும் அமைத்துள்ளது. தமிழக அரசுடன் அந்த நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி சென்னை தரமணியில் செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்கவுள்ளது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று  உயர் அலுவலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
திருச்சி மெட்ரோவால் திமுக எம்.பி.க்கும் காங்கிரஸ் எம்.பி.க்கும் உண்டான விவாதம்

இந்த நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. அந்த நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வணிக ஒப்பந்தகள், கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம். இதன் மூலம் ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்கவும், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை தீர்மானித்து செயல்படுகிறோம்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது மற்றும் தொழில் முதலீடுகளை ஈா்க்க அமெரிக்கா சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், ​​அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

வெள்ளிக்கிழமை, முதல்வர் தனது பயணத்தின் முதல் நாளில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், பல துறைகளில் 4,100 புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்தார்.

இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறைச் செயலா் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, சான்பிரான்ஸிஸ்கோவுக்கான இந்திய துணைத் தூதா் ஸ்ரீகா் ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com