நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ரயில் சேவை சீரானது.!

விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்கள், ரயில் நிலையங்களை தாமதமாக சென்றடைந்தன..

ANI

Updated On :

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்துவிட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் - விக்கிரவாண்டி இடையே சித்தணி என்ற இடத்தில் உள்ள தென்பெண்ணையாற்று ரயில்வே பாலத்துக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, இந்தப் பாதையில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் தஞ்சை மாா்க்கமாக செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

வைகை, பல்லவன் உள்பட மொத்தம் 48-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

சென்னை எழும்பூரிலிருந்து திங்கள்கிழமை புறப்பட வேண்டிய வைகை, சோழன், பல்லவன் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள், திருநெல்வேலி வந்தே பாரத் ரயில், நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் மற்றும் புதுச்சேரி, மன்னாா்குடி செல்லும் விரைவு ரயில்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இரு மாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டன.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்கு வந்த உழவன், சிலம்பு, பாண்டியன் உள்பட 14-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

இந்த நிலையில், நேற்று பிற்பகலுக்குப்பின் விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில்வே பாலங்களில் நீா்வரத்து அளவு குறைந்ததும் இவ்வழித்தடத்தில் மீண்டும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை எழும்பூா் மற்றும் தாம்பரத்துக்கு நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் இன்று(டிச. 3) காலை சுமார் ஒரு மணி நேரம் கால தாமதமாக சென்னையை சென்றடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.