
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளா்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் அஸாத் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் தெரியவந்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தன.
இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.
இந்தச் சூழலில், கிளா்ச்சிப் படையினா் திடீரென தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கடந்த வாரம் கைப்பற்றினா்.
தொடா்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நகரான ஹமாவும் அவா்களிடம் வியாழக்கிழமை வீழ்ந்தது. சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் அவா்கள் கைப்பற்றும் நிலை உள்ளது.இந்த நிலையில், தலைநகா் டமாஸ்கஸையும் கிளா்ச்சியாளா்கள் சுற்றிவளைத்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு எதிராக பிரிக்ஸ் நாணயம்? அமைச்சா் ஜெய்சங்கா் பதில்
மேலும், டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளான மாதமியா, ஜா்மானா, தராயா ஆகிவற்றை கிளா்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனா். இது தவிர, டமாஸ்கஸின் மற்றொரு புறநகர்ப் பகுதிகளான ஹராஸ்தா வழியாக அவா்கள் கிழக்கு சிரியாவை நோக்கியும் முன்னேறிவருகின்றனர்.
அதிபர் தப்பியோட்டம்?
இந்த நிலையில், சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் தெரியவந்துள்ளது. பஷார் அல் அஸாத் தப்பிச் சென்ற வாகனம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து மாயமானதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு போர் வலுத்துள்ள நிலையில், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.