
எதிர்நீச்சல் நாயகி மதுமிதா நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் எதிர்நீச்சல். இத்தொடர் கடந்த ஜூன் 8ஆம் தேதி 744 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்தின் தான் நடிக்கவில்லை என்று அவரே பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: ரஜினி - மணிரத்னம் படம் உறுதி?
இந்த நிலையில், நடிகை மதுமிதா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் உடன் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நடிக்கிறார்.
மேலும், இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இத்தொடரின் முன்னோட்டக் காட்சி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடருக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரையில் மதுமிதாவை காண்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.