
திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவுக்கு மக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று பதிலளித்துப் பேசினார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவின்போது மலை ஏறுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்று பேரவை உறுப்பினர் பிச்சாண்டி என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”சங்கக்காலத்தில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக். 18 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலை கிரிவல பாதையில் நேரில் கள ஆய்வை மேற்கொண்டார்.
இதையும் படிக்க: தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக உ.வே.சா. பிறந்த நாள்!
திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் கொப்பறை தீப தீபம் இன்றியமையாத ஒன்று. இந்த நிலையில், மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து வல்லுநா் குழு 3 நாள்கள் ஆய்வு செய்தது. அவர்கள் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 350 கிலோ கொண்ட கொப்பரை மற்றும் சுமார் 450 கிலோ நெய்யை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். இவை இரண்டையும் எடுத்துச் செல்வதற்கு தேவையான மனித சக்திகளைப் பயன்படுத்தி, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல், தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை உச்சியின் மேல் இந்தாண்டும் தீபம் எரியும்” என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.