
கோவில்பட்டி: கோவில்பட்டியில் வீட்டிலிருந்த 10 வயது சிறுவனை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிறுவனை பெற்றோர் செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்டனர்.
கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்த கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறாராம். கருப்பசாமி (10) அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கருப்பசாமி கடந்த ஒரு வார காலமாக அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து இருந்து வந்தாராம்
தம்பதி திங்கள்கிழமை வழக்கம்போல, கூலி வேலைக்கு சென்று விட்டார்களாம். வீட்டிலிருந்த கருப்பசாமியை பார்ப்பதற்கு அவரது பாட்டி வந்தபோது, கருப்பசாமி வீட்டில் இல்லையாம்.
இதையடுத்து, அவரது பாட்டி, மருமகளுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாராம். பல இடங்களில் தேடியும் கருப்பசாமி கிடைக்காததையடுத்து காணாமல் போன கருப்பசாமியை கண்டுபிடித்து தருமாறு அவரது தாய் பாலசுந்தரி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் கருப்பசாமி வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் படுத்து இருக்கின்ற நிலையில் பார்த்த எதிர் வீட்டுக்காரர், கருப்பசாமி பெற்றோருக்கு செவ்வாய்க்கிழமை காலை தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து அந்த வீட்டின் மாடிக்குச் சென்று கருப்பசாமியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதிக்க மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
கருப்பசாமி அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவன் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர்.
கருப்பசாமியை தங்க நகைக்காகக் கடத்திச் சென்று சிறுவனைக் கொன்று மாடியில் போட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.