தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கனமழை எச்சரிக்கை: சதுரகிரி மலைக்குச் செல்லத் தடை!

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சதுரகிரி மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 டிசம்பர் 2024, 7:48 am

DIN

கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை மாத பௌர்ணமி நாளன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பின் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதம் 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சதுரகிரியில் டிசம்பர் 13 முதல் 16-ம் தேதி வரை கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் டிசம்பர் 12-ம் தேதி முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதாலும், தாணிப்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், டிசம்பர் 13 முதல் 16-ம் தேதி வரை கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்கு சதுரகிாி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.