மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு!
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு காலம் சனிக்கிழமை(டிச.14) முதல் மேலும் 33 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக: சஞ்சய் ரெளத்
அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 6,384 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,198 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 117.31 அடியிலிருந்து 117.57 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 89.64 டிஎம்சியாக உள்ளது.
மழையளவு 13.2 மி.மீ பதிவாகியுள்ளது.