
குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வு மையம் மற்றும் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய இன்று(டிச. 18) கடைசி நாளாகும்.
துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட குரூப் 2 பணியிடங்கள், உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள குரூப் 2ஏ பணியிடங்கள் என மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.
அதன்படி, இந்த பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த டிச. 12 ஆம் தேதி வெளியிட்டது.
குரூப் 2 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க, தோ்வுக் கட்டணம் செலுத்துதல், தமிழ்த் தகுதித் தோ்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம், தோ்வு மையத்தை தோ்ந்தெடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ள தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தேர்வுக் கட்டணம் செலுத்தவும் தேர்வு மையத்தை தேர்வு செய்யவும் சான்றிதழ்களைப் பதிவேற்றவும் இன்று(டிச. 18) கடைசி நாளாகும்.
தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்குக் கோரும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.