தொழிலதிபரை மணம் புரிந்த பி.வி.சிந்து!

நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பிரபல தொழிலதிபரை மணம் புரிந்துள்ளார்.
தொழிலதிபரை மணம் புரிந்த பி.வி.சிந்து!
படம் | மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து பிரபல தொழிலதிபரை மணம் புரிந்துள்ளார்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மின்டனில் இரண்டு முறை பதக்கங்களை வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

புதிய பயணம்

பாட்மின்டனில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து அவரது வாழ்க்கையில் திருமணம் எனும் புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளார். 29 வயதாகும் அவர் பிரபல தொழிலதிபரான வெங்கட தத்தா சாய் என்பவரை மணம் முடித்துள்ளார்.

பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரின் திருமணம் நேற்று (டிசம்பர் 22) நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உதய்பூரில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் திருமண நிகழ்வு புகைப்படத்தை பதிவிட்டு புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நமது பாட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்கியுள்ள அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என்றார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் லக்னௌவில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பெற்ற பிறகு, அவரது திருமணம் தொடர்பான செய்திகள் அதிகமானதையடுத்து, தற்போது அவரது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

புதுமண தம்பதிகள் தங்களது திருமண வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு பிரபலங்களையும் அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com