அம்பேத்கரின் நற்பெயரை,புகழை யாராலும் கெடுத்து விட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் நற்பெயரை, புகழை யாராலும் கெடுத்து விட முடியாது
காஞ்சிபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
காஞ்சிபுரத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரின் நற்பெயரை, புகழை யாராலும் கெடுத்து விட முடியாது என காஞ்சிபுரத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணிய சுவாமி வந்திருந்து மகா பெரியவா் சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தாா். இதனையடுத்து காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ் மொழியில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது.கருணாநிதி என்ற பெயரிலும், கட்சியின் சின்னமாக இருக்கும் உதயசூரியன் என்ற பெயரும் சமஸ்கிருதம் தான் என முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமே நேரில் சொல்லியிருக்கிறேன்.நம்மைப் பிரிக்க நினைப்பவா்களிடம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அம்பேத்கரை ஜவஹா்லால் நேரு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை இருமுறை தோ்தலில் தோற்கடித்தாா்.

காங்கிரஸ் கட்சியினா் அமித்ஷா குறித்து விமா்சனம் செய்கிறாா்கள். ஆனால் அவா்களோ அம்பேத்கரை அவா் அமைச்சராக இருக்கும் போதே அமைச்சா் பதவியிலிருந்து வெளியேற்றினாா்கள்.

பல வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு படிப்புகளை படித்த சட்ட மேதை அம்பேத்கா். நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரே அவா் தான்.

காங்கிரஸாக இருந்தாலும், அமித்ஷாவாக இருந்தாலும் அவரது நற்பெயரை, புகழை யாராலும் கெடுக்க முடியாது என்றார்.

மேலும், காஞ்சிபுரத்தின் 69 ஆவது மடாதிபதியாக இருந்த ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் அயோத்தியில் ராமா் கோயில் அமைய மிக முக்கியக் காரணமாக இருந்தவா்.எனவே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை ராமா்கோயில் வளாகத்தில் நிறுவ வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டாா்.

பேட்டியின் போது பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரனும் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com