ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

2 நாள்கள் மட்டுமே... சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது?

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் டிச. 30, 31-ல் மழை.

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :27 டிசம்பர் 2024, 8:30 am

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் டிச. 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கான கடைசி மழையும் நிறைவடைந்துவிட்டது. பூண்டி ஏரி மீண்டும் நிரம்பியுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 95% நிரம்பியுள்ளன. தொடர்ந்து, பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை.

காற்றழுத்த தாழ்வு நிலை கடந்து சென்றும் மீண்டும் வந்தும் 10 நாள்களாக நீடித்தது. இதன் காரணமாக கடந்த 2 நாள்களாக சென்னையில் நல்ல மழை பெய்தது. திருத்தணியில் 82 மி.மீ. மழையும் நகரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 70 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறிய அளவிலான மழைமேகங்களால் டிச. 30, 31 ஆகிய தேதிகளில் மழை பெய்யும். தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் ஆண்டின் இறுதி மற்றும் ஜனவரி மாதத்தில்கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று(டிச. 27) கடைசியாக தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, டெல்டா பகுதிகள், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் கோவையில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.