பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே வாக்குவாதம்.
பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ்-அன்புமணிக்கு இடையே வாக்குவாதம்.
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மேடையில் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

ராமதாஸ்: பாமக இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் முகுந்தனை அறிவிக்கிறேன். அன்புமணிக்கு உதவியாக என்றார்.

அன்புமணி: எனக்கா...

ராமதாஸ்: ஆமாம்

அன்புமணி: வேண்டாம். கட்சியில் 4 மாதத்துக்கு முன்னாடி தான் வந்திருக்கிறார். இளைஞரணி அணித் தலைவர் பதவி என்றால். அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது. நல்ல திறமையான அனுபவசாலியை நியமிங்க என்றார்.

ராமதாஸ்: யாராக இருந்தாலும் நான் சொல்வதைதான் கேட்கணும். கேட்கவில்லை என்றால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

அன்புமணி: அது சரி

ராமதாஸ்: என்னா, சரின்னா, போ அப்போ... மீண்டும் சொல்கிறேன். முகுந்தன்தான் இளைஞர் அணித் தலைவர். எல்லோரும் கைத்தட்டுங்கப்பா... என்றார் ராமதாஸ்.

அன்புமணி: குடும்பத்தில் இருந்து இன்னொன்ன போடு... குடும்பத்தில் இருந்து... என்ன சொல்றது என ஆவேசமாக மைக்கை தூக்கிப் போட்டார்.

இதையடுத்து கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்து நன்றி தெரிவிக்க முயன்றார்.

அப்போது அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி சென்னை பனையூரில் எனக்கு புதிதாக ஒரு அலுவலகம் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அங்கு வந்து என்னை எல்லோரும் பார்க்கலாம். 4446060628 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தார்.

ராமதாஸ்: இன்னொரு அலுவலகம் திறந்துக்க. பரசுராமன் முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப் போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைனா... அவ்வளவுதான்... வேறு என்னா சொல்ல முடியும். முகுந்தன்தான் தலைவர். நான் சொல்வதைதான். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் விலகிக்கொள்ளுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com