பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் நேரடி மோதல் !

இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல்..
2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பாமத தலைவர் அன்புமணி .
2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பாமத தலைவர் அன்புமணி .
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணித் தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதை அடுத்து பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ், கெளரவத் தலைவர். ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பொதுக்குழு தொடக்கமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் -க்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், கட்சியின் வளர்ச்சி , எதிர்கால செயல்பாடுகள் குறித்து ராமதாஸ் பேசினார்.

பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி. இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.

அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மீண்டும் சொல்கிறேன். நான் உருவாக்கிய வன்னியர் சங்கம், கட்சி. இங்கு நான்தான் முடிவு எடுப்போன். நான் சொல்வதை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் அது யாராக இருந்தாலும் கட்சியில் இருக்க முடியாது, விலகிக்கொள்ளலாம் என மேடையில் அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் ராமதாஸ்.

பல நாள் தந்தை-மகனுக்கிடையே(நிறுவனத் தலைவர்-தலைவர்) நடந்து வந்த பனிப்போர் இன்று பகிரங்கமாக வெடித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் பனிப்போரால் தொண்டர்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.

மேடையில் இருந்து இறங்கி வந்த அன்புமணியை தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு அன்புமணி ராமதாஸ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது ராமதாஸ் காரை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com