கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குமரியில் கண்ணாடி பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்து வைத்தார்.

News image

குமரி கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்துவைத்தார்.

Updated On :30 டிசம்பர் 2024, 11:56 am

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 30) திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி கடலில் அடிக்கடி ஏற்படும் கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து அவ்வப்போது ரத்து செய்யப்படும்.

இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைத்து பாலம் அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதை நிறைவேற்றும் வகையில், ரூ. 37 கோடியில் 77 மீட்டா் நீளம் 10 மீட்டா் அகலத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார்.

கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், விவேகானந்தர் பாறை முகப்பு வரை சென்று திரும்பினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.