சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணிகள்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் பயணிகள்.

புத்தாண்டு: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.
Published on

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை(ஜன. 1) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு - 01.01.2025 (புதன்கிழமை), சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை & சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் புத்தாண்டு நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

இதனால், 15 முதல் 30 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com