புத்தாண்டு: ஆளுநர், துணை முதல்வர் வாழ்த்து!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர், துணை முதல்வர் வாழ்த்து!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிகோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.

சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மோடிக்காக அழைப்புப் பெற அமெரிக்கா சென்றாரா ஜெய்சங்கர்? சுவாமி கிண்டல்!

துணை முதல்வர் உதயநிதி தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “பிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்! கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதல்வர் ஸ்டாலினின் அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும்.

2026-இல், 7-ஆவது முறையாக திமுக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம். தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com