ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை: முதல்வர் ரங்கசாமி தாக்கல்!

புதுச்சேரி அரசின் அடுத்த ஐந்து மாத செலவினங்களுக்கான ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார்
ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை: முதல்வர் ரங்கசாமி தாக்கல்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசின் அடுத்த ஐந்து மாத செலவினங்களுக்கான ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் என். ரங்கசாமி வியாழக்கிழமை (பிப்.22) தாக்கல் செய்தார்

புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும், மாா்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு மாா்ச்சில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிகழாண்டும் (2024-25) சட்டப்பேரவைக் கூட்டத்தில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது, இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (பிப்.22) காலை 9.45 மணிக்கு கூடியது. தொடர்ந்து ஐந்து மாத அரசு செலவினங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கான ரூ.4634 கோடி 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

முதல்வர் ரஙகசாமி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, பேரவை காலவரையின்றி பேரவைத் தலைவர் செல்வம் ஒத்திவைத்தார்.

ரூ.4634.29 கோடிக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை: முதல்வர் ரங்கசாமி தாக்கல்!
பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாததால் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, எதிர்க்கட்சித்தலைவர் சிவா எழுந்து, "முழுமையாந நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யதது மக்களுக்கு செய்யும் துரோகம் என தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

இரங்கல்

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதையடுத்து காங்கிரஸைச் சேர்ந்த வைத்தியநாதன், திமுகவைச் சேர்ந்த நாஜிம், சுயேட்சை எம்எல்ஏ நேரு, எதிர்க்கட்சித்தலைவர் சிவா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர். சிலை அமைக்க கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன்,பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com