திமுக கூட்டணியில் கொமதே கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்டு வென்ற நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மதிமுக இ.யூ.மு.லீ, கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுக்கு திமுக சனிக்கிழமை தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய சற்று நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகிறார் என தகவல் வெளியானது.

கோப்புப்படம்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு!

இந்த நிலையில், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக வெள்ளிக்கிழமை(பிப்.24) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில்- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உதய சூரியன் சின்னத்தில் போட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் பேசுகையில், திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற நாமக்கல் தொகுதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடும்.

மக்களவைத் தேர்தலில் புது முகத்தை நிறுத்த வாய்ப்புள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூடி விரைவில் அறிவிக்கும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.

மதிமுக தரப்பில் இழுபறி

திமுகவுடன் மதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com