தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்க வேண்டும்: காவல்துறைக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் எவ்வாறு தங்கள் கடமைகளைச் செய்கிறார்களோ அதேபோன்று மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தலை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்

News image

தெலங்கான முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி

Updated On :3 ஜூலை 2024, 4:56 am

ஹைதராபாத்: நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் எவ்வாறு தங்கள் கடமைகளைச் செய்கிறார்களோ அதேபோன்று மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தலை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு தெலங்கான முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உயர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ரெட்டி, மாநில மற்றும் நகர காவல்துறையினரின் பணியைப் பாராட்டினார் .

அரசியல் அமைப்புகளை கண்காணிப்பதை போலீசார் குறைத்துக்கொண்டு குற்றங்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மக்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் ரேவந்த் ரெட்டி.

மேலும் காவலர்களின் குழந்தைகளின் நலனுக்காக சைனிக் பள்ளிகளைப் போன்று 'காவல் பள்ளிகள்' நிறுவப்படும் என்றார்.

தெலங்கானாவின் பிராண்ட் இமேஜை ஹைதராபாத் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், மாநில தலைநகரில் நடக்கும் குற்றங்களைத் தடுக்காவிட்டால் மாநிலம் பாதிக்கப்படும் என்றார்.

ஹைதராபாத்தின் சிறப்பு மதிப்பீட்டை பாதுகாக்குமாறு காவல்துறையினரை அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.