மோரிகாவ்ன் மாவட்டத்தில் உள்ள சில்துபி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தகரக் கூரையை மழை நீரில் நனைந்தபடி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர்.
மோரிகாவ்ன் மாவட்டத்தில் உள்ள சில்துபி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தகரக் கூரையை மழை நீரில் நனைந்தபடி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர்.

அஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா தேசிய பூங்காவில் 17 வன விலங்குகள் நீரில் மூழ்கி பலி, 72 மீட்பு

அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவின் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காண்டாமிருக குட்டி மற்றும் பன்றி மான் உட்பட பதினேழு வன விலங்குகள் நீரில் மூழ்கி இறந்தன.

காசிரங்கா (அஸ்ஸாம்): அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய பூங்காவின் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காண்டாமிருக குட்டி மற்றும் பன்றி மான் உட்பட பதினேழு வன விலங்குகள் நீரில் மூழ்கி இறந்தன, 72 விலங்குகள் வெள்ள நீரில் இருந்து வன அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும், 32 வன விலங்குகள் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் மற்ற விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, பூங்காவில் உள்ள 173 வன முகாம்கள் இன்னும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் கள இயக்குநர் சோனாலி கோஷ் கூறுகையில், அஸ்ஸாமில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ள நீர் ஓடுவதால் 29 மாவட்டங்களில் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது.

மழை வெள்ளத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நீரில் பாதிப்பில் இருந்து 55 பன்றி மான்கள், இரண்டு நீர்நாய்கள், 2 சாம்பார், 2 ஸ்கோப் ஆந்தைகள், ஒரு காண்டாமிருக கன்று, ஒரு இந்திய முயல், ஒரு காட்டு பூனை என 72 வன விலங்குகளை பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.காண்டாமிருக குட்டி மற்றும் பன்றி மான் உட்பட பதினேழு வன விலங்குகள் நீரில் மூழ்கி இறந்தன, 32 வன விலங்குகள் தற்போது சிகிச்சையில் உள்ளன மற்ற விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அஸ்ஸாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி புதன்கிழமை 8 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மோரிகாவ்ன் மாவட்டத்தில் உள்ள சில்துபி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டின் தகரக் கூரையை மழை நீரில் நனைந்தபடி சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர்.
மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு

இரண்டாவது மழை வெள்ளத்தால் 29 மாவட்டங்களைச் சேர்ந்த 16.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் ஒட்டுமொத்த வெள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

கோல்பாரா, நாகோன், நல்பாரி, கம்ரூப், மோரிகான், திப்ருகார், சோனித்பூர், லக்கிம்பூர், தெற்கு சல்மாரா, துப்ரி, ஜோர்ஹட், சாரேடியோ, ஹோஜாய், கரீம்கஞ்ச், சிவசாகர், போங்கைகான், பர்பெட்டா, தேமாஜி, ஹைலகண்டி, தர்ராங், பிலாக்ஹாட், கச்சார், கம்ரூப் (எம்), டின்சுகியா, கர்பி அங்லாங், சிராங், கர்பி அங்லாங் வெஸ்ட், மஜூலி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 11,20,165 விலங்குகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள 515 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் 3.86 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மாவட்ட நிர்வாகம், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் மீட்புக் குழுவினர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை 8377 பேரை மீட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com