எம்.ஆா். விஜயபாஸ்கா், ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புஞ்சை தோட்டக் குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார்.
புஞ்சை தோட்டக் குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார்.
Published on
Updated on
1 min read

கரூா்: கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் சோ்ந்து மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கிவிட்டதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது தம்பி சேகா் உள்பட 3 போ் மீது பிரகாஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.

இந்த வழக்கில் போலீஸாா் தன்னை கைது செய்யாமலிருக்க முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு ஜூன் 25-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்பிணை கேட்டு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது வழக்குரைஞா்கள் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு மீதான தீா்ப்பு வியாழக்கிழமை வழங்கப்பட இருந்த நிலையில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள இடைக்கால பிணை கேட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம், தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி குற்றம்சாட்டப்பட்டவருக்கு இடைக்கால பிணை வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்தநிலையில், சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கரை தேடி வரும் நிலையில், கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அவரது ஆதரவாளர் புஞ்சை தோட்டக்குறிச்சி சேர்ந்த செல்வராஜ், கூலி நாயக்கனூரை சேர்ந்த யுவராஜ் ஆகியோர் வீடுகள் மற்றும் மேலும் இருவரது வீடுகளிலும், செங்கல் சூலைகள் நான்கு இடங்களில் சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

புஞ்சை தோட்டக் குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார்.
விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்: முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே, ஏற்கெனவே 2-ஆவது முறையாக முன்பிணை கேட்டு தாக்கல் செய்த மனுமீதான தீா்ப்பு வெள்ளிக்கிழமை வரும் நிலையில் அவரது ஆதராவளர்களஅ வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com