
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி, அவரிடம்தான் இருந்தது. இது அரசியல் பழிக்குப்பழியாக நடந்த கொலை அல்ல என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் (54) நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணி தொடர்பாக செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை, அரசியலில் பழிக்குப்படியாக நடந்த கொலை அல்ல, கைதானவர்கள் யாரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வியை ஆய்வு செய்யப்பட்டது 3மணி நேரத்தில் காவல் துறையினரால் 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் துப்பாக்கி அவரிடம்தான் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை வழக்கில் சரணடைந்த 6 பேரும் மீது பல வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட ஆற்காடு பாலா மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் நேற்று கொலை செய்யப்பட்டார்.
அங்கு புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் நண்பர்களுடன் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில், அப்போது அங்கே 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிறகு பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.