சரியான பாதையில்.. ரயில் ஓட்டுநர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த ராகுல்!

ஒரு எதிர்க்கட்சித் தலைவராக, பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார் ராகுல்.
ரயில் ஓட்டுநர்களுடன் ராகுல்
ரயில் ஓட்டுநர்களுடன் ராகுல்
Published on
Updated on
2 min read

புது தில்லி: ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சரியான பாதையில் பயணித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.

புது தில்லி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை, நாடு முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்களை நேற்று நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார்.

போதுமான ஓட்டுநர்கள் இல்லாததால், குறைவான ஓய்வே கிடைப்பதாக ரயில் ஓட்டுநர்கள் ராகுல் காந்தியிடம் கூறியுள்ளனர். உங்களது பிரச்னை நிச்சயம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று ராகுல் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி
ரயில் நிலையத்தில் ராகுல் காந்தி

ரயில் பயணிகளில், நீண்ட தூர ரயில்களை இயக்குபவர்கள், வீடுகளை விட்டு வெகு தொலைவில் தங்க வேண்டிய நிலை ஏற்படும் நிலையில், அவ்வப்போது போதிய ஓய்வின்றி, ரயில்களை இயக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ரயில் ஓட்டுநர்களுக்குத் தேவையான இடைவேளைகள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் ராகுலிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது.

ரயில் ஓட்டுநர்களுடன் ராகுல்
2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும்... கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்!

இதனால், ரயில் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், இது பெரும்பாலான ரயில் விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயில் ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டறிந்த ராகுல்
ரயில் ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டறிந்த ராகுல்

இதனை இந்திய ரயில்வே பல வேளைகளில் ஒப்புக்கொண்டுள்ளது என்றும், அண்மையில் விசாகப்பட்டினம் ரயில் விபத்தின் விசாரணை அறிக்கையிலும் கூட இது கூறப்பட்டிருந்ததையும் ரயில் ஓட்டுநர்கள் சுட்டிக்காட்டினர்.

ரயில் ஓட்டுநர்கள், தங்களுக்கு வாரத்தில் 46 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்றும், உதாரணமாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினால், ஞாயிற்றுக்கிழமை காலை வரை ஓய்வு கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ரயில்வே சட்டம் 1989 மற்றும் இதர விதிமுறைகள் ஏற்கனவே ரயில் ஓட்டுநர்களுக்கு வாரத்தில் 30 + 16 மணி நேர ஓய்வு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. விமான ஓட்டுநர்களுக்கும் இதற்கு இணையான ஓய்வு வழங்கப்படுவதகாவும், இதனை ஒட்டியே ரயில் ஓட்டுநர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாள்கள் இரவுப்பணி வழங்கப்பட்டால், அடுத்த நாள் இரவு அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும், ரயில் சேவையில் மிகவும் முக்கியத்துவம் வகிப்பது ஓட்டுநர்கள்தான் என்பதையும் அவர்கள் முக்கியமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

தற்போது, ரயில் ஓட்டுநர்களை பணிநியமனம் செய்யும் வேலைகளை மத்திய அரசு நிறுத்திவைத்திருப்பதால், போதுமான ரயில் ஓட்டுநர்கள் இல்லாததால், போதிய ஓய்வு கிடைப்பதில்லை என்கிறார்கள்.

புதுதில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களுடன் ராகுல்
புதுதில்லி ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களுடன் ராகுல்

ஏற்கனவே ரயில்வேயில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்களின் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்வே தேர்வாணையம் ஒரே ஒரு ரயில் ஓட்டுநரைக்கூட பணிநியமனம் செய்யவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வேயை தனியார்மயமாக்குவதை நிறுத்தவும், பணிநியமனங்கள் செய்யப்படாமல் இருப்பதும் தொடர்ந்து ரயல் ஓட்டுநர்களின் கோரிக்கையாக இருந்து வருவதை கட்சி அறிந்திருப்பதாகவும், இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். இவை சரி செய்யப்பட்டால், விபத்துகள் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000 கிலோ மீட்டர் பாரத ஒற்றுமை பயணத்தை ராகுல் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com