நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!நிலவு தோன்றி மறையும் அழகிய விடியோ பகிர்ந்தார் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி!!வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!

யோகி பாபுவின் போட்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி', அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.

இவரது இயக்கத்தில் வெளியான 'கசடதபற' படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது இவர் இயக்கி வரும் படம் 'போட்'.  

மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.

இப்படத்தில் யோகி பாபு, கெளரி ஜி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

போட் படத்தின் டீசர் சென்றாண்டு வெளியான நிலையில், கடந்த பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், போட் திரைப்படம் வரும் ஆக. 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.