
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பிச்சாண்டி (59). இவர் தென்கடப்பந்தாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி.கிரண் ஸ்ருதி மற்றும் வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.