
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தாய் மற்றும் 2 மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கடன் பிரச்னையால் தாய் உஷா(37), மகள்கள் நிவேதா (16), சர்மிளா (11), ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிவேதா பிளஸ் 2, ஷர்மிளா எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர்.
கடன் பிரச்னை காரணமாக, இன்று காலை ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த உஷாவின் கணவர், ரமேஷ் (42), தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால், மனமுடைந்த மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியேறிய ரமேஷை, போலீஸார் மற்றும் உறவினர்கள் தேடி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.