சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Published on
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட துமர் கட்டா மற்றும் சிங்கவரம் கிராமங்களுக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு மாவட்ட பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை அந்த காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கு இடையே மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜிநாமா!

பின்னர், பலியான நக்சலிடமிருந்து துப்பாக்கி,ஒரு வயர்லெஸ் செட், வெடிபொருட்கள் மற்றும் நக்சல் தொடர்பான பொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

உயிரிழந்த நக்சலைட்டின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது," என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்துடன், இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் 142 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com