
இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய பொது பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தார்.
மோசமான காலநிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றன. சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. தனியார் முதலீடுகள் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு சரிவிலிருந்து மீண்டு வருகின்றன.
நமது நாட்டில், வேளாண் துறையானது இன்னும் வளர்ச்சியடைவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது, மேலும், வேளாண் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஊக்குவிக்கப்படுவதும் வேளாண் நிலங்கள் ஒருங்கிணைக்கப்படுவதும் அவசியம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.