
செல்ஃபி மோகத்தால் வேலூர் கோட்டை அகழியில் விழுந்த பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையை சுற்றி நீர் நிறைந்த அகழி அமைந்துள்ளது.
மாலை நேரத்தில் அதிகமான பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று(ஜூலை 24) மாலை திடீரென ஒரு இளம் பெண் கோட்டை நுழைவு வாயில் அருகே உள்ள அகழியில் திடீரென விழுந்துள்ளார். அவரை பொது மக்கள் மக்கள் காவல் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ,அகழியின் தடுப்பு சுவர் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென பின்பக்கமாக அகழியில் விழுந்ததாகவும், அவர் விழுந்த பகுதியில் ஆழம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
மேலும், அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தமிடவே பொதுமக்களில் சிலர் ஓடிச் சென்று அகழியில் விழுந்த இளம்பெண்ணை மீட்க முயன்றனர். தொடர்ந்து அங்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், கயிறு மூலம் இளம் பெண்ணை மீட்டனர்.
விசாரணையில், அவர் சைதாப்பேட்டை சேர்ந்த 23 வயது பெண் என்பது தெரியவந்தது.
அந்தப் பெண் தவறி விழுந்தாரா? செல்ஃபி எடுக்கும் போது சம்பவம் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.