வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கவிதா என்பவர் அதே பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் 4 லட்சம் வரை பணம் செலுத்தி வந்ததாகவும். இதனை அப்போது பணியிலிருந்த சுடர்நிதி என்ற அஞ்சல் அலுவலக ஊழியர் கையாடல் செய்ததாகவும், தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி கடந்த 2 ஆண்டுக்கு மேலாகப் பலமுறை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுவரை உரிய நடவடிக்கை இல்லாததால் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் கவிதா மாவட்ட ஆட்சியர் வரும்போது அவர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள் தண்ணீர் ஊற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
There was a huge commotion after a disabled woman attempted to set herself on fire at the Vellore Collectorate office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் திமுக பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


