ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆக. 7-ல் ஆடிப்பூரத் தேரோட்டம்!

ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
Published on
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டாள், ரெங்கமன்னார்.
ஆண்டாள், ரெங்கமன்னார்.

முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9 மணிக்கு கருட கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர், ராம்கோ குழும இயக்குநர் நிர்மலா ராஜூ, ராம்கோ கல்வி குழும இயக்குநர் ஶ்ரீகண்டன் ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் லட்சுமணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
அரசு நிகழ்ச்சிகளில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் : அஸ்ஸாம் முதல்வா் அறிவிப்பு!

முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் - ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.

ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகதோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com