
சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 70.50 குறைக்கப்பட்டு, சனிக்கிழமை முதல் ரூ. 1,840.50 ஆக விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை அவ்வபோது மாற்றி அமைத்து வருகின்றன.
அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (ஜூன்.1) வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன.
அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு ரூ. 1,911 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 1,840.50 ஆக விற்பனையாகிறது.
கடந்த மே மாதம் ரூ.19 விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ரூ.69.5, கொல்கத்தாவில் ரூ.75 மற்றும் மும்பையில் ரூ.69.5 என சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ. 818.50-க்கு விற்பனையாகிறது.
கடந்த 12 மாதங்களில், ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை சிலிண்டர் விலை ரூ.300 குறைந்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.200 குறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.