நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்!

சீனா, சாங்’இ-6 எனப்படும் தனது விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியுள்ளது.
சாங்’இ-6 லேண்டரின் மாதிரிப் படம்
சாங்’இ-6 லேண்டரின் மாதிரிப் படம்
Published on
Updated on
1 min read

சீனாவின் சாங்’இ-6 விண்கலம் இன்று நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் அறியப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து அப்பகுதியின் தன்மையை ஆராயவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முதலில் இந்தியா தனது சந்திராயன்-3 விண்கலத்தை இறக்கி கடந்தாண்டு சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவும் அந்தப் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளது.

நிலவின் மறுபகுதிக்கு விண்கலங்களை அனுப்புவது மிகவும் சவாலான ஒன்று. மிகவும் கரடுமுரடான, பூமியை எதிர்கொள்ளாத பின்பகுதி என்பதால் பூமியுடன் தகவல் தொடர்பைப் பராமரிக்க இடையே ஒரு இணைப்புச் (ரிலே) செயற்கைகோள் தேவைப்படுகிறது.

சாங்’இ-6 லேண்டரின் மாதிரிப் படம்
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம் ரத்து!

பெய்ஜிங் நேரப்படி காலை 6.23 மணிக்கு தென் துருவப் பகுதியிலுள்ள எய்ட்கென் பேசின் எனப்படும் பெரிய பள்ளத்தில் சாங்’இ-6 விண்கலம் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சாங்’இ மூன் எனப்படும் நிலவைக் குறிப்பிடும் சீனக் கடவுளின் பெயரைக் கொண்ட இந்த நிலவு ஆராய்ச்சித் திட்டத்தில் இது ஆறாவது விண்கலமாகும். இந்த விண்கலம், 2 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு தனது இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியைக் கொண்டு 2 கிலோகிராம் அளவு மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதி மணல், பாறை மாதிரிகளை சேகரிக்கும். பின்னர் அந்த மாதிரிகள் நிலவைச் சுற்றி வரும் லேண்டருக்கு மாற்றப்பட்டு, அந்த லேண்டர் வருகிற ஜூன் 25 அன்று பூமிக்குத் திரும்பி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் துருவம் - எய்ட்கென் பேசின் பகுதி
தென் துருவம் - எய்ட்கென் பேசின் பகுதி

சீனாவுக்கு நிலவை ஆய்வு செய்தல் அமெரிக்காவுடனான போட்டியில் ஒரு பகுதியாகும். அமெரிக்கா தொடர்ந்து விண்வெளி ஆய்வில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்தியா, ஜப்பான் நாடுகளும் அந்தப் போட்டியில் இணைந்துள்ளன.

சீனா தனக்கென சொந்தமாக ஒரு விண்வெளி மையத்தை அமைத்து, தொடர்ந்து வீரர்களை ஆராய்ச்சிக்கு அனுப்பி வருகிறது. மேலும், 2030-ம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது. முதன்முதலில் நிலவுக்கு ஆட்களை அனுப்பி 50 ஆண்டுகள் கடந்த பிறகு, அமெரிக்காவும் மீண்டும் 2026-ல் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com