
சோன்பத்ரா (உத்தரப்பிரதேசம்): உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.49 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய புவியியல் ஆய்வு மைய அறிக்கையின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3.49 மணியளவில் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மணிப்பூரில் நிலநடுக்கம்
மணிப்பூர் மாநிலம் சண்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவானது.
நிலநடுக்கம் சண்டல் பகுதியில் 77 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.