
புதுதில்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் பொய்யானது என்பது ஜூன் 4 ஆம் தேதி வெளிப்படும். அன்று மாலைக்குள் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமராக மாறியிருப்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. இதையடுத்து, ஊடகங்களின் வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான ஊடகங்களின் கணிப்பு முடிவுகள் அடிப்படையில், பாஜக தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கருத்துக்கணிப்பு முற்றிலும் போலியானது. இந்திய கூட்டணிக்கு குறைந்தபட்சம் 295 தொகுதிகளில் தனது வெற்றியை பதிவு செய்யும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில வாரியாக ஆய்வு செய்து 295 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முடிவு செய்ததாகவும், வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜகவின் உளவியல் விளையாட்டு என்று குற்றம் சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், இது நமது தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே நம்பிக்கையை சிதைத்து உற்சாகத்தை குறைப்பதுடன் தோ்தல் பணியிலுள்ள அதிகாரிகளை மிரட்டுவதற்காக இதுபோன்ற வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜகவால் வெளியிடப்படுவதாகவும், ஆனால் அது நடக்காது. உண்மையான முடிவுகள் செவ்வாய்க்கிழமை(ஜூன் 4) தெரிய வரும். அன்று மாலைக்குள் பிரதமர் முன்னாள் பிரதமராக மாறியிருப்பார் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.