பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 6 பேர் பலி(கோப்புப்படம்)
பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 6 பேர் பலி(கோப்புப்படம்)

பிலிப்பின்ஸ் மீன்பிடி படகு தீ விபத்தில் 6 பேர் பலி, 6 பேர் மீட்பு

மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் கடலில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலியாகினர்,
Published on

மணிலா: மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் கடலில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலியாகினர், மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டதாக கடலோர காவல் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் செபுவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், சுமார் 7,600 தீவுகள் கொண்டு தீவுத்தொகுப்புகளை கொண்ட நாடாகும். அங்கு தீவுகளுக்கு இடையே நடைபெறும் படகு போக்குவரத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிலிப்பைன்ஸ் செபு மாகாணத்தில் நாகா நகரை அடுத்து புதன்கிழமை இரவு மீன்பிடி படகு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூங்கில் அவுட்ரிகர்களைக் கொண்ட மரத்தால் ஆன படகுகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ படகைச் சூழ்ந்துகொள்வதற்கு முன்பு என்ஜின் பாதிப்புக்குள்ளானது. இதில் செய்வதறியாமல் தவித்த மீன்பிடித் தொழிலாளர்களில் சிலர் காயமடைந்தனர் மற்றும் சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் படகில் இருந்து தண்ணீரில் குதித்தனர்.

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 6 பேர் பலி(கோப்புப்படம்)
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!

அப்போது அந்த வழியாகச் சென்ற இழுவைப் படகு தீயை அணைக்க உதவியது. தீ விபத்து குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தது.

தகவல் அறிந்து வந்த கடலோரக் காவல்படை மற்றும் மீட்புப் படையினர் தண்ணீரில் குதித்தவர்களையும், படகில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர், மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் செபுவில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாக பராமரிக்கப்படும் படகுகள், நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக கையாளப்படுவது போன்ற காரணங்களால் கடல் விபத்துகள் நிகழ்வது பொதுவானவை.

1987 டிசம்பரில், டோனா பாஸ் என்ற அதிக நெரிசலான படகு, எரிபொருள் டேங்கருடன் மோதியதில் மூழ்கியது, ஆசியாவின் டைட்டானிக் என்று சிலரால் கருதப்படும் உலகின் மிக மோசமான அமைதிக் கால கடல் பேரழிவில் 4,300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com