
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மோதலும் காதலும் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மறு உருவாக்கமாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட தொடர் 'மோதலும் காதலும்'.
இத்தொடரின் பிரதான பாத்திரங்களில் சமீர் அகமது, அஸ்வதி ஆஷ், தன்விகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சுரேஷ் சண்முகம் இத்தொடரை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வரும் தொடரின் நாயகன், குழந்தைக்காக குழந்தை நல மருத்துவரான நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களை சுற்றிய கதை தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோதலும் காதலும் தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
இத்தொடர் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் நிறைவடையவுள்ளது, மோதலும் காதலும் தொடர் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோதலும் காதலும் தொடர் நிறைவடையவுள்ளதால், இத்தொடருக்கு பதில் பனிவிழும் மலர்வனம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.