ரீல் இப்போ ரியல்.. இரண்டாம் திருமண அறிவிப்பை அறிவித்தார் நடிகை ஸ்ரித்திகா!

தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை அறிவித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா.
ரீல் இப்போ ரியல்.. இரண்டாம் திருமண அறிவிப்பை அறிவித்தார் நடிகை ஸ்ரித்திகா!
Updated on
2 min read

தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை அறிவித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா.

'நாதஸ்வரம்' தொடரில் மலராக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. இவர் 'குலதெய்வம்', 'என் இனியத் தோழி', 'கல்யாணமாம் கல்யாணம்', 'கல்யாணப் பரிசு', 'மகராசி' உள்ளிட்ட தொடர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இவர், சனேஷ் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரித்திகா மகராசி தொடரில் அவருடன் நடித்த நடிகர் ஆர்யனை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு நானும், ஆர்யனும் எங்களது முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வந்துவிட்டோம். கடந்த கால வாழ்க்கை குறித்து நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எதிர்மறையான விஷயத்தை பகிர்ந்துகொள்ளவும் விரும்பவில்லை, எங்களது புனிதமான நட்பு அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது.

உங்களது ஆதரவு மற்றும் வாழ்த்துகளுடன் நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை விரைவில் பகிர்வோம்.

ரீல் இப்போ ரியல்.. இரண்டாம் திருமண அறிவிப்பை அறிவித்தார் நடிகை ஸ்ரித்திகா!
நிறைவுற்ற தருணத்தில் எதிர்நீச்சல் தொடர் குழு!

என்னுடைய முன்னாள் கணவர் பெயரில் இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் ஐடியை தொழில்நுட்பக் கோளாறால் மாற்ற முடியவில்லை. விரைவில் சரிசெய்யப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யன் முன்னதாக திருமகள் தொடரில் நடித்த நிவேதா பங்கஜை திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாககரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரித்திகா மற்றும் ஆர்யன் இருவரும் மகராசி தொடரில் நடித்தபோது நட்பாக பழகிவந்த நிலையில் காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com