
இந்த வாரம் ஓடிடி தளங்களில் 5 தமிழ் மொழி திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வாரந்தோறும் ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் காஷ்மிரா பர்தேசி, பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பிடி சார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான அரண்மனை - 4 திரைப்படம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவான ரசவாதி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆர். விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அழகிய கண்ணே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி, மாதவி லதா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சிங்கப்பெண்ணே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
லால் ஜூனியர் இயக்கத்தில் டொவினா தாமஸ், ஷோபின் ஷாஹிர், பாவனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் நடிகர். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.