மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை!
தமிழகத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், "பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் கலைஞர் நூற்றாண்டில் முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் என்று, ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை, இந்த 10 மாதங்களில், தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 11 ஆயிரத்து 323 கோடி ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் உரிமைத் தொகை கோரி, மேல்முறையீடு செய்யப்பட்டவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாள்களுக்குள் இ-சேவை மூலமாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.