
சென்னை: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த மாவட்ட மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா ? என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை பேரவையில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?
கள்ளச்சாராய மரணங்கள் 63-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று முதல்வர் மக்களை சந்திக்காதது ஏன்? முதல்வருக்கு பயமா?
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்! என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.